zondag 20 april 2008

கிழக்கு மாகாண பிரபுக்களை படுகொலை செய்ய திட்டம் அம்பலமாகியுள்ளது.

Sunday, 20 April 2008

பிள்ளையான் மற்றும் அவரின் திவிர ரசிகர்களையும் அதன் ரசிகர் மன்ற அதிகாரிகளை படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் தீட்டிய திட்டம் அம்பலமாகியுள்ளது.

இதில் பிள்ளையான் பத்மினி வீட்டுக்கு கதைப்பதுக்காக போகும் போதும் இனியபாரதி முலம் படுகொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளது தெரிய வந்துள்ளது...


அண்மையில் திகனவில் வைத்து வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளார்.

maandag 14 april 2008

மீண்டும்?

மீண்டும் சு**ர்...............

ச****ம் என்ற ரேடியோ நடத்தி அப்போது நடந்த கருணாவின் தூராகத்தை பயன் படுத்தி நோர்வேயில் இருக்கும் சேது ரூபன்கூட இனைந்து தமிழ்த்தேசியம் டமில் என்று பேசி வயிறை வளத்து சுவிஸில் கலைநிகழ்ச்சிக்கு என்று போய் காசு சேர்த்து அதையும் ஊடகவியாளர் நாடேசன் க்கும் சேர்த்த காசை கொடுக்க மனம் இல்லாம அதை பங்கு போடுவதில் பிரச்சனைபட்டு தாய்லாந்த் பக்கம் ஓடி போய் நிண்டு வந்தவர் தானே?


இதுக்குள்ள இவரின் மைத்துனன் பாட்டு கேற்பதுக்கு என்று போனில் பேசும் பெண்களை குறிப்பாக திருமணம் ஆனா பெண்களுடன் இரட்டை அர்த்தங்களில் பேசி சரிவருபர்களிடம் சுய இனபம் பெற்றவர் தானே?
அவரின் பெயர் எழுதி தான் தெரியவேண்டுமா?

குறிப்பாக பாரிஸ் ஜேர்மனி சுவிஸ் போன்ற நாடுகளில் கனவன் மார் இரவு வேலைக்கு போனதும் பொழுது போக்குகாக ரேடியோவில் பேச போன் எடுத்தா இஅவர் தனது மன்மத லீலையை தொடங்கிடுவார்.......................



இன்னும் எழுத கனக்க இருக்கு அதுக்கு முன். தற்ப்போது சுவிஸில் நடக்க இருக்கும் நிகழ்சியால் எத்தனை குடும்பங்கள் சீரழிய போகிறதோ தெரியவில்லை..........................

தொடரும்..............................

பூசாரிக்கு ஏன் இந்த வேலை?

தமிழீழ தனியரசு உருவாக நோர்வே ஆதரவளிக்காது - நோர்வே விசேட சமாதான தூதுவர்


[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2008, 04:46.18 PM GMT +05:30 ]

தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கு நோர்வே ஒருபோதும் ஆதரவளிக்காது என விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் தெரிவித்துள்ளார்.
நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவாத்தனவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதை நோர்வே ஒருபோதும் ஆதரிக்காது என்று ஜோன் ஹன்சன் பௌவர் தன்னிடம் கூறியதாக ஜயலத் ஜெயவர்தன கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நோர்வே இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடி நிலையில் அனுசரணையாளர்களாக செயல்பட முடியாது என்று ஹன்சன் பௌவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மோதல்கள் இடம்பெற்று வருவதால் தம்மால் மத்தியஸ்த முயற்ச்சியில் ஈடுபடமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.

வன்னிக் களமுனை மாறுமா?

வன்னிக் களமுனை மாறுமா? இறுகிப் போயுள்ள வன்னிக் களமுனையில் சடுதியான மாற்றங்கள் ஏற்படப் போவதான அறிகுறிகள் தென்படுகின்றன. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகளின் தளபதிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் ஆற்றிவரும் உரைகள் அதனைக் கோடி காட்டுகின்றன. தாங்கள் களமுனையில் என்ன செய்யப் போகின்றோம் என்பது பற்றி பொதுவாக விடுதலைப் புலிகள் கதைப்பது குறைவு. ஆனால், அண்மைக் காலங்களாக பொறி பறக்கும் மேடைப் பேச்சுக்கள், செவ்விகள் என அடிக்கடி வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் போர் தொடர்பான, அடுத்த கட்ட நகர்வு தொடர்பான பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. யுத்தத்தில் சோர்வடைந்துள்ள சிங்களப் படையினரின் உளவுரணை மேலும் குலைத்து விடவோ அன்றி தமிழ் மக்களின் மனங்களில் தோன்றியுள்ள சலிப்பு நிலையைப் போக்கடிப்பதற்காகவோ கூறப்படும் கருத்துக்களாக இவற்றை யாரும் வர்ணிக்கலாம். ஆனால், விடுதலைப் புலிகளைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு அண்மைக்காலப் பேச்சுக்களில் விசேடம் இருப்பதை ஊகிப்பதில் சிரமம் இருக்காது. அத்தோடு இந்தப் பேச்சக்களோடு இணைந்ததாகச் சில செயற்பாடுகளும் உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் மிக முக்கியமானது மடுமாதா சொரூபத்தின் இடமாற்றம். இந்த விவகாரத்தில் விடுதலைப் புலிகளின் தூண்டுதல் எதுவும் இல்லை என்பது வெளிப்படையானது. ஆனால், சொரூபம் அகற்றப் பட்டமையும், அங்கே தஞ்சம் அடைந்திருந்த மக்கள் வெளியேறியமையும் அவர்களுக்கு களத்தில் தமது முழுப் பலத்தையும் பிரயோகிக்கக் கூடிய வாய்ப்பை வழங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. இதைத் தவிர மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. அண்மையில் கொக்கட்டிச்சோலை - மணற்பிட்டிப் பகுதியில் வெடித்த கண்ணிவெடி இதற்கு உதாரணம். போதாதற்கு வாகரைப் பிரதேசத்தில் இயந்திரமில்லாத நிலையில் சில படகுகளும் கைப்பற்றப் பட்டுள்ளன. ஆயதங்களும் முpட்கப் பட்டதாகத் தகவல்களும் வெளியாகியிருந்தன. ஏற்கனவே, தென்னிலங்கையில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் விடுதலைப் புலிகள் அணியை எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே சிங்கள ஆயுதப் படைகள் உள்ளன. கம்பஹா மாவட்டத்தில் வெடித்த குண்டு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயைப் பலி கொண்ட அதே வேளை சிங்கள அரசியல் பிரமுகர்களிடையே கிலியை ஏற்படுத்தி அவர்களின் நடமாட்டங்களைக் கட்டுப் படுத்தி உள்ளதுடன் வாய்ச் சவடால்களையும் குறைத்துள்ளது. வன்னியைச் சுற்றி வளைத்து விடுதலைப் புலிகளை முற்றுகைக்குள் வைத்திருப்பதாக மகிந்த கூட்டணி அடிக்கடி தெரிவித்து வரும் நிலையில், அது உண்மையாக இல்லாத போதிலும் கூட அவர்கள் கூறுவதற்காகவாவது ஒரு பாரிய தாக்குதலைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் விடுதலைப் புலிகள் உள்ளனர். இதன் மூலம் அவர்கள் தற்போதுள்ள தற்காப்பு நிலையில் இருந்து விடுபட்டு எதிரியைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளலாம். எதிரி மனச் சோர்வு அடைந்துள்ள இன்றைய வேளையில் பிரதேசங்களை மீட்பதற்கும் கூட வாய்ப்பு இருக்கின்றது. தற்போது எங்கே, எப்போது பெரும் தாக்குதல் ஒன்று நடைபெறப் போகின்றது என்பதே கேள்வி. எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்தில், சிறந்த திட்டமிடலுடன், உச்ச பலத்தைப் பிரயோகித்துத் தாக்குவதே விடுதலைப் புலிகளின் வழக்கமான உத்தி. அது முகமாலைக் களமுனையா, வவுனியாக் களமுனையா, மன்னார்க் களமுனையா, மணலாறுக் களமுனையா, திருமலையா, மட்டக்களப்பா, அம்பாறையா, கொழும்பா, தென்பகுதி மாவட்டமா அல்லது கடந்த அக்டோபரில் அநுராதபுரம் தாக்கப்பட்டதைப் போன்று எதிர்பாராத ஒரு இலக்கா என்பது அடுத்த ஓரிரு வாரங்களில் தெரிய வரும்

zondag 13 april 2008

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபடலாம் - ரிவிர

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபடலாம் - ரிவிர


[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2008, 07:33.28 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் அடைந்துவரும் யுத்த தோல்விகளின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடக்கூடிய சாத்தியம் இருப்பதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரகசிய பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு பிளவுபட்டால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

zaterdag 12 april 2008

மன்னாரில் சிறிலங்காப் படையினரின் 4 முனை முன்நகர்வு தடுத்து நிறுத்தம்: 30 படையினர் பலி- 75 பேர் காயம்

மன்னாரில் சிறிலங்காப் படையினரின் 4 முனை முன்நகர்வு தடுத்து நிறுத்தம்: 30 படையினர் பலி- 75 பேர் காயம்
[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008, 08:00 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மன்னாரில் இன்று சிறிலங்காப் படையினர் 4 முனைகளில் பெரும் எடுப்பில் நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் படைத்தரப்பினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். இச்சமர்களில் 30 படையினர் கொல்லப்பட்டனர். 75 படையினர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்காப் படையினர் இன்று சனிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் ஆட்டிலெறிகள், பல்குழல் வெடிகணைகள் ஆகியவற்றின் செறிவான சூட்டதாரவுடனும் கிபீர் ரக வானூர்திகளின் தாக்குதல் ஆதரவுடனும் செறிவான நான்கு முனைத்தாக்குதலை நடத்தினர்.
கட்டுக்கரை- மணல்மோட்டை- பாலைப்பெருமாள் கட்டுப்பகுதியிலிருந்து பெரிய உடைப்பு சுலுசுப் பக்கமாக ஒரு நகர்வும்
பரப்பாங்கண்டலில் இருந்து கள்ளி அடைஞ்சான் நோக்கி ஒரு நகர்வும்
இத்திக்கண்டலிலிருந்து புளியங்குளம் நோக்கி ஒரு நகர்வும்
இத்திக்கண்டலிலிருந்து பறையகுளம் நோக்கி ஒரு நகர்வும் சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
இன்று பிற்பகல் 1:30 மணிவரை விடுதலைப் புலிகள் நடத்திய உக்கிர தாக்குதலையடுத்து படையினரின் நகர்வுகள் நிறுத்தப்பட்டன.
இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 75 படையினர் காயமடைந்தனர்.
விடுதலைப் புலிகள் தரப்பில் 3 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
மேலும் மன்னார் மடு- தட்சணாமருதமடுப் பகுதி மீது சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
தட்சணாமருதமடுவுக்கு மேற்காக உள்ள விளாத்திக்குளம் பகுதியிலும் மோதல் இடம்பெற்றது.

நெல்லியடியில் சொல்லி அடி

நெல்லியடியில் படையினர் மீது கிளைமோர் தாக்குதல்
[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008, 08:45 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
யாழ். வடமராட்சி நெல்லியடியில் சிறிலங்காப் படையினர் மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாலுச்சந்திக்கும் நெல்லியடிக்கும் இடையில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்காப் படையினர் மீது இக் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டது.

vrijdag 11 april 2008

இது எல்லாம் ஒரு பிழைப்பா?

சீனா.நூற்றைம்பது கோடி மக்கள்.ஜனநாயகம் என்றால் என்ன வென்று தெரியாது.உட்கார, எழுந்திருக்க என இவர்களைக் கேட்டுக் கொண்டு தான் எதையும் செய்ய வேண்டும்.சீனாவில் மட்டும் அல்ல...இவர்களது நேச நாடுகளான, மியான்மார், வடக்கு கொரியா என்று எல்லா இடத்திலும் மக்கள் பணயக் கைதிகளாக.ஆயுதங்களை கொடுத்து,அந் நாட்டு மக்களை அழித்து, அங்கு சீனர்களை அனுப்பி, அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று குரல் கொடுத்துக் கொண்டே இவர்களின் ஆதிக்கப் பரவல்.உலகமெங்கும் இவர்களின் உற்பத்திப் பொருட்கள்.வியாபார ஆக்கிரமிப்பு.பெரியண்ணன் விழி பிதுங்குகிறது.இடையே எங்கே இந்தியா முன்னேறிவிடுமோ என்று அச்சம்.பெரியண்ணனுடன் எந்த விதத்திலும் சேர முடியாதபடி,இந்தியப் பச்சோந்திகளின் மூலமாகத் தினம் தோறும் ஏதாவது ஒரு குடைச்சல்.போதாக்குறைக்கு, இஸ்லாமாபாத் என்னும் எடுப்பார் கைப்பிள்ளை.அருணாச்சலப் பிரதேசம் என்னுடையது.தைவான் !அதுவும் என்னுடையது.அதற்கு உலக அரங்கில் தனி நாடு என்று அங்கீகாரமா?தடுப்போம் என்று ஆணவம்!ஹாங்காங்..ஆம்!அது நேற்றைக்கே நாங்கள் உறுதி செய்து விட்டோம்.கேட்போம் உரிமை , கேட்போம் உரிமை என்று எதற்கெடுத்தாலும் உரிமைக் குரல் கொடுக்கும் இந்தியப் பச்சோந்திகளின் தாயகமான சீனாவில் மனித உரிமை என்றால் என்னவென்றே தெரியாது.இவர்களது படோடபத்தை, டாம்பீகத்தைக் காட்டிக் கொள்ள ஒலிம்பிக் உள்ளே நுழைந்தது.செய்த , செய்யும், செய்யப் போகும் பாவம் அத்தனைக்கும் சேர்த்து சீனாவின் ஆணவத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது, திபெத்.சென்னை தெருக்களில், மூட்டை மூட்டையாய் கம்பளிகளைச் சுமந்து செல்லும் திபெத்தியர்களை நான் பார்த்திருக்கிறேன்..இன்று அவர்கள், உலகமெங்கும் திரண்டெழுந்து விட்டார்கள்...ஒலிம்பிக் தீப்பந்தம் செல்லும் திசையெல்லாம், மக்கள் கண்களில் தீ ஜ்வாலையுடன் போராட்டம்.யானையாய் இருக்கும் சீனாவின் காதில் கட்டெறும்பாக திபெத்.பெரியண்ணன் அட்டகாசமாய் இந்த சதுரங்கத்தில் காய்களை நகர்த்துகிறது.ஐக்கிய நாட்டின் தலைவர் சீனா செல்லப் போவதில்லை.ஒலிம்பிக் தலைவர் "நீங்கள் மனித உரிமையைக் காப்போம் என்று சொன்னது என்னவாயிற்று?"என்று கேட்கிறார்.இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர், கையில் திபெத் கொடியுடன் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்...அது போல் பிரஞ்சு நாடு.சாதுக்களான திபெத்தியர்கள், தலாய்லாமா என்ற சாதுவைத் தெய்வமாக நினைக்கும் திபெத்தியர்கள் இந்த சமயத்தில்,விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!பீகிங்கின் பலம் உலகத்துக்குத் தெரிய வேண்டிய இந்தத் தருணத்தில், இவர்களின் பலவீனம் இன்று வெளிச்சம் போட்டுக் காட்டப் படுகிறது.திபெத்தியர்கள்,தங்கள் பக்கம் உலகம் இருப்பதை உணர்ந்து, மகாராஜாவுடன் மோத ஆரம்பித்து விட்டார்கள்...அவர்களுக்குத் தெரிந்து விட்டது, இனி சீனா .... சொக்கட்டான் ராஜா தான் என்று.இந்தச் சொக்கட்டானின் கொட்டம் சுத்தமாக ஒடுக்கப்பட வேண்டும்.நடுவீதிக்கு வந்து போராடும் திபெத்தியர்களின் போராட்டம் வெல்லட்டும்....அதற்கு இந்தியாவும் துணை நிற்கட்டும்!

கொலை-31 ஆண்டுக்கு பின் இருவருக்கு தண்டனை

கொலை-31 ஆண்டுக்கு பின் இருவருக்கு தண்டனைவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற

கோவை: சமபந்தி விருந்தில் தலித் மாணவரை அடித்து கொன்ற வழக்கில் 31 ஆண்டுகள் கழித்து 2 பேருக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர் தண்டபாணி. கடந்த 1977ம் ஆண்டு மார்ச் 3ம் தேதியன்று சிங்காநல்லூரில் உள்ள ஒரு கோயிலில் சமபந்தி விருந்து நடந்தது. இதில் தண்டபாணியும் அவரது நண்பர்களும் சென்று சாப்பிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சில உயர்ஜாதியினர் தண்டபாணியை சரமாரியாக அடித்து உதைத்தனர்.பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தண்டபாணி சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 31 ஆண்டுகளாக நடைபெற்றது.இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிபதி ஜி.சொக்கலிங்கம் நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பில், தண்டபாணியை அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ், நீலகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.7000 அபராதமும் விதிக்கப்பட்டது. கார்த்திக், சம்பத் ஆகியோருக்கு தலா 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவர், கொலை நடந்தபோது சிறுவர்களாக இருந்ததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.ஒரு கொலை வழக்கில் 31 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமல் வீரவங்ச தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜே.வி.பியின் பரப்புரை செயலாளரர் விமல் வீரவங்ச தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஜே.வி.பியில் இருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறிய விமல் வீரவங்சவிற்கும் அவருடைய சகாக்களுக்கும் ஜே.வி.பியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுஇதனை அடுத்தே விமல் வீரவங்ச தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்;இதேவேளை விமல் வீரவங்சவின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்கானதுடன் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

pathivu.com

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்-ஐரோப்பாவுக்கு வைகோ கோரிக்கை

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்-ஐரோப்பாவுக்கு வைகோ கோரிக்கைவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11, 2008

ஆஸ்லோ: உலகின் மூத்த இனமான தமிழினத்தை அழிக்காமல் காக்க இலங்கையை ஐரோப்பிய யூனியன் நிர்ப்பந்திக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.நார்வே தலைநகர் ஆஸ்லோ வந்துள்ள வைகோ, அங்கு நடைபெறும் தெற்காசியாவில் மோதல்களும், வன்முறையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கத்திற்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை இயக்கம், ஐரோப்பிய யூனியன், ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.இந்த கருத்தரங்கில் வைகோ பேசுகையில், இலங்கையில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உலகின் மூத்த இனம் ஒன்று ஒட்டுமொத்தமாக அங்கு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியன் இனியும் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் கண்மூடிக் கொண்டு இருக்கக் கூடாது.உடனடியாக தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும், விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும், தமிழினத்தை அழிக்கக் கூடாது என்று இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.இலங்கை இனப் பிரச்சினைக்கு ஆயுதம் மூலம் தீர்வு காண முடியாது. ராணுவத்திற்கு அங்கு வெற்றி கிடைக்காது. தனி நாட்டை மட்டுமே தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் வசித்து வரும் பகுதிகள் பாரம்பரியமாக தமிழர்களின் உணர்வு பதிந்த பூமி. அந்தப் பூமியை விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை.ஆண்டாண்டு காலமாக அரசால் ஒடுக்கப்பட்டதால்தான் பொங்கி எழுந்து ஆயுதப் போராட்டத்தில் அவர்கள் குதித்தனர். அரசுப் படைகளின் தொடர் தாக்குதல்களால் லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் அகதிகளாக வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் துடைக்க ஐரோப்பிய யூனியன் முன்வர வேண்டும் என்றார் வைகோ.நிகழ்ச்சியில் ரவிசங்கர் பேசுகையில், இலங்கையில் தமிழர்கள் படும் துயரத்தை இனியும் உலக சமுதாயம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. குறிப்பாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்மூடிக் கொண்டு இருக்கக் கூடாது.சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை தமிழர்களின் துயர் துடைக்க தீவிரமாக களம் இறக்கப்பட வேண்டும் என்றார்.

donderdag 10 april 2008

தெற்காசிய மோதல்கள் குறித்த கருத்தரங்கம்: வைகோ நார்வே பயணம்

தெற்காசிய மோதல்கள் குறித்த கருத்தரங்கம்: வைகோ நார்வே

பயணம்வியாழக்கிழமை, ஏப்ரல் 10, 2008


சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்றுள்ளார். அங்கு நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் அவர் கலந்து கொள்கிறார். தனது நார்வே பயணத்தின்போது இலங்கை விவகாரம் தொடர்பாக அமைதித் தூதரை அவர் சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.நார்வே தலைநகர் ஆஸ்லோவில், நார்வே அமைதிக் குழு, ஐரோப்பிய யூனியன், வாழும் கலை அமைப்பு ஆகியவற்றின் சார்பில், தெற்காசியாவில் மோதல்களும், அமைதியும் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது.இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து வைகோவும், சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். இதை ஏற்று வைகோ நேற்று நார்வே புறப்பட்டுச் சென்றார்.இந்த மாநாட்டில் இலங்கைத் தமிழ் எம்.பிக்கள், சிங்கள எம்.பிக்கள், இலங்கை, மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் புத்த குருமார்களும் கலந்து கொள்கின்றனர்.தனது நார்வே பயணத்தின் போது அமைதித் தூதர் எரீக் சோல்ஹீமை வைகோ சந்தித்து, ஈழத் தமிழர்கள் மீதான ராணுவத்தின் சமீபத்திய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.

மடு நோக்கிய படையெடுப்பால் படையில் உள்ள கத்தோலிக்கர்கள் குழப்பம்

மடு நோக்கிய படையெடுப்பால் படையில் உள்ள கத்தோலிக்கர்கள் குழப்பம்-ஜ.தே.க

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு எதற்காக மடுவிற்குச் செல்ல வேண்டும் என்று சிறிலங்காப் படையினரில் உள்ள கத்தோலிக்கர்கள் கேள்வி எழுப்புவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது படையினர் நல்லூர் கோவில் பக்கத்துக்கே செல்லவில்லை எனினும் அரசு அரசியல் லாபத்திற்காக மடுவைக் கைப்பற்ற முனைகின்றது என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் செனிவிரட்ன நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அவார் மேலும் பேசியதாவது பொத்துவிலில் அதிரடிப்படையினருக்கும், படையினருக்கும் இடையே துப்பாக்கி மோதல் நடைபெற்றுள்ளது.பிள்ளையானின் நிபந்தனைகளுக்காக அங்கிருந்த அதிரடிப்படையினரை விலக்கிய நிலையில் இன்று அதிரடிப்படையினருடன் படையினர் மோதலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகின்றனர். பிள்ளையான் நிச்சயம் இந்த அரசாங்கத்திற்கு சிக்கல்களை உண்டு பண்ணுவார். அவர், தற்போது கிழக்கில் தமக்குரிய முகாம்களை அமைத்து வருகிறார். ஒரு காலத்தில் இந்த பிள்ளையான் அரசுக்கு எதிராகச் செயற்படுவார். அமைச்சர் ஜெயராஜ் கம்பகாவில் படுகொலை செய்யப்பட அரசாங்கம் மதவாச்சி வீதியை மூடும் முட்டாள்த்தனமான செயலைச் செய்கிறது. மக்களுக்கு இன்றுள்ள நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் மேலும் பிரச்சினைகளையே கொடுக்கின்றது என்றார் அவர்

dinsdag 8 april 2008

வணக்கம்

உங்களை நானும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...............