தெற்காசிய மோதல்கள் குறித்த கருத்தரங்கம்: வைகோ நார்வே
பயணம்வியாழக்கிழமை, ஏப்ரல் 10, 2008
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்றுள்ளார். அங்கு நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் அவர் கலந்து கொள்கிறார். தனது நார்வே பயணத்தின்போது இலங்கை விவகாரம் தொடர்பாக அமைதித் தூதரை அவர் சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.நார்வே தலைநகர் ஆஸ்லோவில், நார்வே அமைதிக் குழு, ஐரோப்பிய யூனியன், வாழும் கலை அமைப்பு ஆகியவற்றின் சார்பில், தெற்காசியாவில் மோதல்களும், அமைதியும் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது.இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து வைகோவும், சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். இதை ஏற்று வைகோ நேற்று நார்வே புறப்பட்டுச் சென்றார்.இந்த மாநாட்டில் இலங்கைத் தமிழ் எம்.பிக்கள், சிங்கள எம்.பிக்கள், இலங்கை, மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் புத்த குருமார்களும் கலந்து கொள்கின்றனர்.தனது நார்வே பயணத்தின் போது அமைதித் தூதர் எரீக் சோல்ஹீமை வைகோ சந்தித்து, ஈழத் தமிழர்கள் மீதான ராணுவத்தின் சமீபத்திய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.
donderdag 10 april 2008
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten