zondag 13 april 2008

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபடலாம் - ரிவிர

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபடலாம் - ரிவிர


[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2008, 07:33.28 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் அடைந்துவரும் யுத்த தோல்விகளின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடக்கூடிய சாத்தியம் இருப்பதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரகசிய பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு பிளவுபட்டால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

Geen opmerkingen: