மடு நோக்கிய படையெடுப்பால் படையில் உள்ள கத்தோலிக்கர்கள் குழப்பம்-ஜ.தே.க
கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு எதற்காக மடுவிற்குச் செல்ல வேண்டும் என்று சிறிலங்காப் படையினரில் உள்ள கத்தோலிக்கர்கள் கேள்வி எழுப்புவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது படையினர் நல்லூர் கோவில் பக்கத்துக்கே செல்லவில்லை எனினும் அரசு அரசியல் லாபத்திற்காக மடுவைக் கைப்பற்ற முனைகின்றது என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் செனிவிரட்ன நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அவார் மேலும் பேசியதாவது பொத்துவிலில் அதிரடிப்படையினருக்கும், படையினருக்கும் இடையே துப்பாக்கி மோதல் நடைபெற்றுள்ளது.பிள்ளையானின் நிபந்தனைகளுக்காக அங்கிருந்த அதிரடிப்படையினரை விலக்கிய நிலையில் இன்று அதிரடிப்படையினருடன் படையினர் மோதலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகின்றனர். பிள்ளையான் நிச்சயம் இந்த அரசாங்கத்திற்கு சிக்கல்களை உண்டு பண்ணுவார். அவர், தற்போது கிழக்கில் தமக்குரிய முகாம்களை அமைத்து வருகிறார். ஒரு காலத்தில் இந்த பிள்ளையான் அரசுக்கு எதிராகச் செயற்படுவார். அமைச்சர் ஜெயராஜ் கம்பகாவில் படுகொலை செய்யப்பட அரசாங்கம் மதவாச்சி வீதியை மூடும் முட்டாள்த்தனமான செயலைச் செய்கிறது. மக்களுக்கு இன்றுள்ள நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் மேலும் பிரச்சினைகளையே கொடுக்கின்றது என்றார் அவர்
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten