maandag 14 april 2008

பூசாரிக்கு ஏன் இந்த வேலை?

தமிழீழ தனியரசு உருவாக நோர்வே ஆதரவளிக்காது - நோர்வே விசேட சமாதான தூதுவர்


[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2008, 04:46.18 PM GMT +05:30 ]

தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கு நோர்வே ஒருபோதும் ஆதரவளிக்காது என விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் தெரிவித்துள்ளார்.
நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவாத்தனவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதை நோர்வே ஒருபோதும் ஆதரிக்காது என்று ஜோன் ஹன்சன் பௌவர் தன்னிடம் கூறியதாக ஜயலத் ஜெயவர்தன கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நோர்வே இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடி நிலையில் அனுசரணையாளர்களாக செயல்பட முடியாது என்று ஹன்சன் பௌவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மோதல்கள் இடம்பெற்று வருவதால் தம்மால் மத்தியஸ்த முயற்ச்சியில் ஈடுபடமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.

Geen opmerkingen: