vrijdag 11 april 2008

இது எல்லாம் ஒரு பிழைப்பா?

சீனா.நூற்றைம்பது கோடி மக்கள்.ஜனநாயகம் என்றால் என்ன வென்று தெரியாது.உட்கார, எழுந்திருக்க என இவர்களைக் கேட்டுக் கொண்டு தான் எதையும் செய்ய வேண்டும்.சீனாவில் மட்டும் அல்ல...இவர்களது நேச நாடுகளான, மியான்மார், வடக்கு கொரியா என்று எல்லா இடத்திலும் மக்கள் பணயக் கைதிகளாக.ஆயுதங்களை கொடுத்து,அந் நாட்டு மக்களை அழித்து, அங்கு சீனர்களை அனுப்பி, அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று குரல் கொடுத்துக் கொண்டே இவர்களின் ஆதிக்கப் பரவல்.உலகமெங்கும் இவர்களின் உற்பத்திப் பொருட்கள்.வியாபார ஆக்கிரமிப்பு.பெரியண்ணன் விழி பிதுங்குகிறது.இடையே எங்கே இந்தியா முன்னேறிவிடுமோ என்று அச்சம்.பெரியண்ணனுடன் எந்த விதத்திலும் சேர முடியாதபடி,இந்தியப் பச்சோந்திகளின் மூலமாகத் தினம் தோறும் ஏதாவது ஒரு குடைச்சல்.போதாக்குறைக்கு, இஸ்லாமாபாத் என்னும் எடுப்பார் கைப்பிள்ளை.அருணாச்சலப் பிரதேசம் என்னுடையது.தைவான் !அதுவும் என்னுடையது.அதற்கு உலக அரங்கில் தனி நாடு என்று அங்கீகாரமா?தடுப்போம் என்று ஆணவம்!ஹாங்காங்..ஆம்!அது நேற்றைக்கே நாங்கள் உறுதி செய்து விட்டோம்.கேட்போம் உரிமை , கேட்போம் உரிமை என்று எதற்கெடுத்தாலும் உரிமைக் குரல் கொடுக்கும் இந்தியப் பச்சோந்திகளின் தாயகமான சீனாவில் மனித உரிமை என்றால் என்னவென்றே தெரியாது.இவர்களது படோடபத்தை, டாம்பீகத்தைக் காட்டிக் கொள்ள ஒலிம்பிக் உள்ளே நுழைந்தது.செய்த , செய்யும், செய்யப் போகும் பாவம் அத்தனைக்கும் சேர்த்து சீனாவின் ஆணவத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது, திபெத்.சென்னை தெருக்களில், மூட்டை மூட்டையாய் கம்பளிகளைச் சுமந்து செல்லும் திபெத்தியர்களை நான் பார்த்திருக்கிறேன்..இன்று அவர்கள், உலகமெங்கும் திரண்டெழுந்து விட்டார்கள்...ஒலிம்பிக் தீப்பந்தம் செல்லும் திசையெல்லாம், மக்கள் கண்களில் தீ ஜ்வாலையுடன் போராட்டம்.யானையாய் இருக்கும் சீனாவின் காதில் கட்டெறும்பாக திபெத்.பெரியண்ணன் அட்டகாசமாய் இந்த சதுரங்கத்தில் காய்களை நகர்த்துகிறது.ஐக்கிய நாட்டின் தலைவர் சீனா செல்லப் போவதில்லை.ஒலிம்பிக் தலைவர் "நீங்கள் மனித உரிமையைக் காப்போம் என்று சொன்னது என்னவாயிற்று?"என்று கேட்கிறார்.இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர், கையில் திபெத் கொடியுடன் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்...அது போல் பிரஞ்சு நாடு.சாதுக்களான திபெத்தியர்கள், தலாய்லாமா என்ற சாதுவைத் தெய்வமாக நினைக்கும் திபெத்தியர்கள் இந்த சமயத்தில்,விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!பீகிங்கின் பலம் உலகத்துக்குத் தெரிய வேண்டிய இந்தத் தருணத்தில், இவர்களின் பலவீனம் இன்று வெளிச்சம் போட்டுக் காட்டப் படுகிறது.திபெத்தியர்கள்,தங்கள் பக்கம் உலகம் இருப்பதை உணர்ந்து, மகாராஜாவுடன் மோத ஆரம்பித்து விட்டார்கள்...அவர்களுக்குத் தெரிந்து விட்டது, இனி சீனா .... சொக்கட்டான் ராஜா தான் என்று.இந்தச் சொக்கட்டானின் கொட்டம் சுத்தமாக ஒடுக்கப்பட வேண்டும்.நடுவீதிக்கு வந்து போராடும் திபெத்தியர்களின் போராட்டம் வெல்லட்டும்....அதற்கு இந்தியாவும் துணை நிற்கட்டும்!

Geen opmerkingen: